வரலாறு காணாத புதிய உச்சம்...ஒரு லட்சம் ரூபாயை நெருங்கிய தங்கம் விலை

இன்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.;

Update:2025-10-14 09:43 IST

சென்னை,

அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.

இதனால் தங்கம் விலை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. கிடுகிடுவென அதிகரிப்பதும், பின்னர் சற்று சரிவதும் என்ற நிலையிலேயே பயணிக்கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஒரே நாளில் 2 முறை விலை மாற்றத்தையும் சந்திக்கிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.245 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,825-க்கும். பவுனுக்கு ரூ.1,960 அதிகரித்து ஒரு பவுன் 94,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலையை போல , வெள்ளி விலையும் பந்தயத்தில் வேகமாக முன்னேறுகிறது. வெள்ளி விலை மட்டுமே ஒரே நாளில் ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.206க்கும், ஒரு கிலோ, 2 லட்சத்து 0 6ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்