உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தாறுமாறாக உயர்ந்த வெள்ளி விலை
விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கூறப்படும் நிலையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.;
சென்னை,
தங்கம் விலை கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் விலை குறைந்து சற்று ஆறுதலை கொடுத்தது.
இந்தநிலையில் நேற்று மீண்டும் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று (27-09-2025) அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.750-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கடந்த 2 நாட்களாக விலை மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.153-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் வெள்ளி விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.6-ம், கிலோவுக்கு ரூ.6 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.159-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
27.09.2025 ஒரு சவரன் ரூ.85,120 (இன்று)
26.09.2025 ஒரு சவரன் ரூ.84,400 (நேற்று)
25.09.2025 ஒரு சவரன் ரூ.84,080
24.09.2025 ஒரு சவரன் ரூ.84,800
23.09.2025 ஒரு சவரன் ரூ.85,120
22.09.2025 ஒரு சவரன் ரூ.83,440
21.09.2025 ஒரு சவரன் ரூ.82,320