இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி ரூ.3½ லட்சம் கோடியாக உயர்வு

இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.;

Update:2026-01-16 06:27 IST

புதுடெல்லி,

உலக அளவில் பல்வேறு நெருக்கடிகள், நிலையற்ற தன்மை போன்ற அசாதாரண சூழல்களிலும் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில் கடந்த மாதத்தில் இருந்த நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி நிலவரத்தை மத்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் வெளியிட்டார்.

அதன்படி இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த மாதம் 1.87 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதாவது 38.5 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.3.47 லட்சம் கோடி) ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. கடந்த ஏப்ரல்-டிசம்பர் மாத காலகட்டத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதியும் 2.44 சதவீதம் அதிகரித்து 330.29 பில்லியன் டாலர் என்ற நிலையை எட்டியுள்ளது.

அதேநேரம் நாட்டின் இறக்குமதியும் கடந்த மாதத்தில் 58.43 பில்லியன் டாலரில் இருந்து 63.55 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது. மேலும் அந்த மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 25 பில்லியன் டாலர் என்றும் அகர்வால் தெரிவித்தார். இந்த நிதியாண்டில், சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதி 850 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.76 லட்சம் கோடி) தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்