கடும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - காரணம் என்ன?

இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.;

Update:2025-06-13 18:44 IST

மும்பை,

வாரத்தின் இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை - 13.6.2024) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் நிறைவடைந்தது.

அதன்படி, 169 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 718 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 555 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 527 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

244 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 335 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 573 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 118 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

44 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 991 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 639 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 570 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை கிடங்குகள், ராணுவ தளங்கள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இன்று அதிகாலை இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள் 6 பேர் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட டிரோன்களை ஈரான் ஏவியது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

போர் பதற்றத்தால் உலக அளவில் பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்திய பங்குச்சந்தை இன்று கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்