கை நிறைய சம்பளம்; கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்- சிஏ படிப்புகள் பற்றிய முழு விவரம்
சி.ஏ. பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு பைனான்சியல் ரிப்போர்ட்டிங், நேஷனல் அன்ட் இண்டர்நேஷேனல் டேக்சேஷேன், பைனான்ஸ் அன்ட் கார்ப்பரேட் லா போன்ற துறைகளில் மிகச்சிறந்த பணி வாய்ப்புகள் உள்ளன.;
Photo Credit: PTI
“சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்” (Chartered Accountant) என அழைக்கப்படும் ‘ஆடிட்டர் தொழில் செய்வதற்குத் தேவையான படிப்பு மற்றும் பயிற்சியை ‘தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா’ (The Institute of Chartered Accountants of India) என்னும் அமைப்பு நடத்தி வருகிறது.“சி.ஏ.படிப்பு” (Chartered Accountant Course) என்னும் படிப்பை நடத்தும் நிறுவனம் 1949ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதாகும்.
பணி வாய்ப்புகள்
இந்தியாவில் நடத்தப்படும் சி.ஏ. பட்டப்படிப்பு இன்று உலகம் முழுவதும் மிகச்சிறந்த படிப்பாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சி.ஏ. பட்டப்படிப்பை முடித்தவர்கள் மிகச்சிறந்த சிறப்புத் திறன்கள் (Special Skills) கொண்டவர்களாகவும், உயர்தர கல்வியின் நடைமுறைகளை தெளிவாகத் தெரிந்தவர்களாகவும் இருப்பதால், இந்த ஆடிட்டர் படிப்பை முடித்தவர்களுக்கு மதிப்பு அதிகமாக உள்ளது.
சி.ஏ. பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு பைனான்சியல் ரிப்போர்ட்டிங், நேஷனல் அன்ட் இண்டர்நேஷேனல் டேக்சேஷேன், பைனான்ஸ் அன்ட் கார்ப்பரேட் லா போன்ற துறைகளில் மிகச்சிறந்த பணி வாய்ப்புகள் உள்ளன. இதனால் ‘குளோபல் அக்கவுண்டன்ட்’ எனப்படும் உலகத்தரக் கணக்காளர் என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.சி.ஏ. பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆடிட்டராகப் பணிபுரிகிறார்கள். அரசுத்துறை, கூட்டுறவுச் சங்கங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிலும் இவர்களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.
1.ஜி.எஸ்.டி. பணி வாய்ப்பு
ஜி.எஸ்.டி. எனப்படும் ‘Goods and Services Tax’ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபின்பு, தொழிற்சாலைகள் (Industries)> வணிக நிறுவனங்கள் (Traders)> சேவை அமைப்புகள் (Service Providers)போன்றவற்றில் வரிகளின் தாக்கத்தை அறிந்துகொள்வதற்கு ஆடிட்டர்களின் உதவி அத்தியாவசியமாகிவிட்டது.
நிறுவனங்கள் வரிகளைச் சட்டப்பூர்வமாக செலுத்துவதற்கு ஆடிட்டர்கள் பெருமளவில் உதவுகிறார்கள். மேலும், ஒரு நிறுவனத்தின் நிதிநிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கும், துறைகளின் தணிக்கைகளுக்கு துணை நிற்கவும், தொழில்முனைவோருக்கு ஆலோசனைகள் வழங்கவும், ஜி.எஸ்.டி. பற்றிய பயிற்சி வழங்கவும் ஆடிட்டர்களின் தேவை மிகவும் அவசியமாகிவிட்டது.
2.நிதித்துறையில் பணி வாய்ப்புகள்
ஆடிட்டர் படிப்பை முடித்தவர்களுக்கு நிதி மேலாண்மைத் துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக –
v முதலீட்டு முடிவுகளின் வியூகங்களை வகுப்பது (Strategic Financial Decisions)
v முதலீட்டு வங்கிகள் (Investment Banking)
v இடர் மேலாண்மை (Risk Management)
v மியூட்சுவல் பண்ட்ஸ் (Mutual Funds)
v கிரெடிட் ரேட்டிங் (Credit Rating)
v வெஞ்சர் கேபிட்டல் (Venture Capital)
v மெர்ஜர் அன்ட் அக்யூசிஷேன் (Merger and Acquisitions)
v கேபிட்டல் மணி மார்க்கெட் (Capital Money Market)
v ஃபாரின் எக்ஸ்சேஞ் இடர் மேலாண்மை (Foreign Exchange Risk Management)
v கருவூல மேலாண்மை (Treasury Management)
-போன்ற பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
3.மேலாண்மை ஆலோசனைப் பணிகள் (Management Consultancy Services)
சி.ஏ. பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு –
v சந்தை ஆய்வு மற்றும் தேவைப் படிப்புகள் (Marketing Research and Demand Studies)
v பட்ஜெட்டிங் இன்வென்டரி மேனேஜ்மெண்ட், வொர்க்கிங் கேபிட்டல் மேனேஜ்மெண்ட் (Budgeting Inventory Management, Working Capital Management)
v பணியாளர் கண்டறிதல் மற்றும் தேர்வு, ஊக்கப்படுத்தும் திட்டங்கள்
v வணிகக் கொள்கைகள், நிறுவனத் திட்டங்கள், அமைப்பு வளர்ச்சி
v ஆலோசனை வழங்கல்
v குவாலிட்டி ஆடிட், எனர்ஜி ஆடிட் அன்ட் என்விரோண்மென்டல் ஆடிட்
-போன்ற துறைகளிலும் பணிவாய்ப்புகள் உள்ளன.
4.தொழிற்சாலை மற்றும் அரசு நிறுவனப் பணிகள்
ஆடிட்டர் படிப்பை முடித்தவர்களுக்கு சரியான வணிக முடிவுகளை (Business Decisions) மேற்கொள்ளும் பணிகள் தொழிற்சாலைகளிலும், அரசு நிறுவனங்களிலும் வழங்கப்படுகிறது. குறிப்பாக – முடிவுகள் எடுப்பதற்கு உதவியாகத் தகவல்களைப் பெறுவதும், பகுத்தாய்வு செய்வதும், அறிக்கை தயார் செய்வதும் இவர்களது முக்கியப் பணிகளாக உள்ளன.மேலும், மேலாண்மைப் பணிகளால் நிகழும் நிதி விளைவுகளை (Financial Effects) மதிப்பீடு செய்யும் பணியும் ஆடிட்டர்களுக்கு வழங்கப்படுகிறது.இவைதவிர, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆடிட்டர் பாடத்தைக் கற்பிக்கும் பேராசிரியர் பணியும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தொழில், வணிக நிறுவனங்களில் பொறுப்புள்ள பதவிகளான – சி.இ.ஓ. (Chief Executive Officer), மேலாண் இயக்குநர் (Managing Director), இயக்குநர் நிதி (Finance Director),முதன்மைக் கணக்காளர் (Chief Accountant) போன்ற பதவிகளும் ஆடிட்டர் படிப்பை முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆடிட்டர் படிப்பான சி.ஏ., பட்டப்படிப்பு படித்தவர்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நேரடியாக பி.எச்.டி. (Ph.D.) பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவிலேயே உயர்ந்த பணிகளான ஐ.ஏ.எஸ். (IAS), ஐ.பி.எஸ். (IPS), ஐ.எப்.எஸ். (IFS), ஐ.ஆர்.எஸ். (IRS), போன்ற பதவிகளில் சேர நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் எழுதவும் இவர்கள் தகுதியானவர்கள். தமிழக அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 (Group-I), குரூப்-2 (Group-II) போன்ற அனைத்துத் தேர்வுகளையும் இவர்கள் எழுத தகுதி படைத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சி.ஏ. பட்டப்படிப்பில் இரண்டு முறைகளில் சேருவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அவை –
1.பவுண்டேஷேன் கோர்ஸ் (Foundation Course)
2.டைரக்ட்-என்ட்ரி (Direct Entry)
-ஆகியவை ஆகும்.
பவுண்டேஷேன் கோர்ஸ் (Foundation Course)
சி.ஏ. பட்டப்படிப்பில் பவுண்டேஷேன் கோர்ஸ் என்பது அடிப்படை வகுப்பு ஆகும். இந்த வகுப்பில் பிளஸ் 2 முடித்தவர்கள் எந்தப் பாடப்பிரிவை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்திருந்தாலும், சேர்ந்து படிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் மே மாதங்களில் பவுண்டேஷேன் கோர்ஸ் தேர்வுகள் நடத்தப்படும். இந்த அடிப்படை வகுப்பில் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த நிலைத் தேர்வான இன்டர்மீடியட் கோர்ஸ் படிப்பில் சேர தகுதிப் பெற்றவர்கள் ஆவார்கள்.
டைரக்ட் என்ட்ரி (Direct Entry)
டைரக்ட் என்ட்ரி என்பது நேரடியான பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக சி.ஏ. பட்டப்படிப்பில் சேருவதற்கான வழிமுறை ஆகும். இதன்படி, இன்டர்மீடியட் கோர்ஸ் (Intermediate Course) படிப்பில் பட்டதாரிகள் நேரடியாக சேர்ந்து ஆடிட்டர் படிப்பைத் தொடரலாம்.
இந்த இன்டர்மீடியட் கோர்ஸ் படிப்பில் சேருவதற்கு வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் (Commerce Graduates) 55 சதவிகிதம் மதிப்பெண்கள் கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும்.இதரப் படிப்புகளான பி.பி.ஏ., பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., பி.இ., பி.டெக்., போன்றவற்றில் பட்டம் அல்லது பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும்.
இன்ஸ்டிட்டியூட் ஆஃப் கம்பெனி செகரட்டரீஸ் ஆஃப் இந்தியா, இன்ஸ்டிட்டியூட் காஸ்ட் அக்கவுண்டன்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் நடத்திய தேர்வுகளில் இண்டர்மீடியட் நிலையில் (Intermediate Level) வெற்றி பெற்றவர்களும் சி.ஏ. பட்டப்படிப்பின் இண்டர்மீடியட் கோர்ஸ் படிப்பில் நேரடியாக சேர்ந்து கொள்ளலாம்.பட்டப்படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் தங்கள் பெயரை இண்டர்மீடியட் கோர்ஸ் படிப்பில் தற்காலிகமாக பெயரைப் பதிவுசெய்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
பின்னர், ‘3 வருட செய்முறைப் பயிற்சிக்கு’ (3 Years Practical Training) பெயரைப் பதிவு செய்ய வேண்டும். 9 மாதங்கள் செய்முறைப் பயிற்சி முடித்தபின்னர் இன்டர்மீடியட் தேர்வு எழுதலாம். எனவே, இந்தத் தேர்வுக்கு முறையாக பயிற்சி செய்து வெற்றி பெறுவது அவசியமான ஒன்றாகும்.
தேர்வு விவரம்
பவுண்டேஷேன் கோர்ஸ் (PAPERS OF FOUNDATION COURSE)
PAPER SUBJECT
PAPER I ACCOUNTING
PAPER 2 BUSINESS LAW
PAPER3 QUANTITATIVE APTITUDE
PAPER4 BUSINESS ECONOMICS
இன்டர்மீடியட் கோர்ஸ் (PAPERS OF INTERMEDIATE COURSE)
PAPERS SUBJECT
PAPER 1 ADVANCED ACCOUNTING
PAPER 2 CORPORATE LAWS AND OTHER LAWS
PAPER 3 TAXATION: A-INCOME TAX B-GOOD AND SERVICES ACT
PAPER 4 COST AND MANAGEMENT ACCOUNTING
PAPER 5 AUDITING AND ETHICS
PAPER 6 A-FINANCIAL MANAGEMENT B-STRATEGIC MANAGEMENT
இறுதித் தேர்வு (PAPERS OF FINAL COURSE)
PAPER SUBJECT
PAPER 1 FINANCIAL REPORTING
PAPER 2 ADVANCED FINANCIAL MANAGEMENT
PAPER 3 ADVANCED AUDITING, ASSURANCE AND PROFESSIONAL ETHICS
PAPER 4 DIRECT TAX LAWS AND INTERNATIONAL TAXATION
PAPER 5 INDIRECT TAX LAWS
PAPER 6 INTEGRATED BUSINESS SOLUTIONS
சம்பளம் எவ்வளவு?
சி.ஏ. படித்தவர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 7.36 லட்சம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆண்டுக்கு ரூபாய் 24.6 லட்சம் அதிக சம்பளம் பெற்ற ஆடிட்டர்களும் இருக்கிறார்கள்.
சமீபத்தில் இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் படிப்பை முடித்த 3 பேருக்கு அதிக சம்பளமாக ஆண்டுக்கு ரூபாய் 70 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். வெளிநாடுகளில் துபாய், சிங்கப்பூர், மலேசியா, அபுதாபி போன்ற நகரங்களில் அதிக சம்பளம் பெற்று ஆடிட்டர்களாக பலர் பணிபுரிகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு….
தொடர்பு முகவரி :
The Institute of Chartered Accountants of India
ICAI Bhawan,
Indraprastha Marg,
Post Box No. 7100,
New Delhi - 110 002.
Website: www.icai.org
REGIONAL COUNCIL OF ICAI
SOUTHERN INDIA REGIONAL COUNCIL (SIRC)
ICAI Bhawan,122, Mahatma Gandhi Road, Nungambakkam Tamilnadu, Chennai 600034, India
Contact Details Ph: 1800-4254265/1800-4254275 E-mail: sirc[at]icai[dot]in Website: https://www.sirc-icai.org/
WESTERN INDIA REGIONAL COUNCIL (WIRC)
Office Address ICAI Tower, Plot no C-40, G Block, Opp. MCA Academy, Besides Standard Chartered Bank, Bandra Kurla Complex, Bandra (East) Maharashtra, Mumbai 400051, India
Contact Details Ph: 022-33671400/ 500 E-mail: wirc[at]icai[dot]in Website: https://wirc-icai.org/
EASTERN INDIA REGIONAL COUNCIL (EIRC)
Office Address Russell Street Office Address: ICAI Bhawan, 7, Anandilal Poddar Sarani (Russell Street), (Near Maidan Metro Station) West Bengal, Kolkata 700107, India
Contact Details Ph: (33) 3084 0210 / 03 E-mail: eirc[at]icai[dot]in Website: https://eirc-icai.org/
CENTRAL INDIA REGIONAL COUNCIL (CIRC)
Office Address ICAI Bhawan, 16/77-B, Civil Lines, Behind Reserve Bank of India, Kanpur. 208 001 (U.P) Uttar Pradesh, Kanpur 208024, India
Contact Details Ph: (512) 2396501, 2396502 E-mail: circ[at]icai[dot]in Website: https://circ.icai.org/
NORTHERN INDIA REGIONAL COUNCIL (NIRC)
Office Address ICAI Bhawan, 5th Floor, 'Annexe' Indraprastha Marg, NEW DELHI - 110 002 Delhi, Delhi 110002, India
Contact Details Ph: (11) 30100511,30100512, 30100513