சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் வேலை வாய்ப்பு.. ரூ.48,000 சம்பளம்- உடனே விண்ணப்பிங்க
ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னை நங்கநல்லூரில் உள்ள ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள்: அலுவலக உதவியாளர், பிளம்பர், எலக்ட்ரிஷியன், டைப்பிஸ்ட் என மொத்தம் 04 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி, 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகப்படியாக 45 வயது வரை இருக்கலாம்.
கல்வி தகுதி: தட்டச்சர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க இருக்க வேண்டும். தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை, ஆங்கிலத்தில் இளநிலை பெற்றிருக்க வேண்டும்.
பிளம்பர் பதவிக்கு அதற்கான ஐடிஐ தகுதிப் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மின்பணியாளர் பதவிக்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மின்சார உரிம வாரியத்தால் வழங்கப்பட்ட பி சான்றிதழை பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: 15,300 - 48,700/- (டைப்பிஸ்ட்)
தேர்வு முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Executive Officer, Arulmigu Adhivyadhihara Bhaktha Anjaneyar Temple, Nanganallur, Chennai – 600061.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.01.2026
முழு விவரங்களுக்கு: https://hrce.tn.gov.in/