ரெயில்வே குரூப் டி தேர்வு... 22 ஆயிரம் பணியிடங்கள்: தேர்வர்களே ரெடியா இருங்க!
தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த தேர்வு தொடர்பான ஒரு தகவலை ஆர்.ஆர்.பி வெளியிட்டுள்ளது.;
சென்னை,
ரெயில்வே துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. ஆர்ஆர்பி வெளியிடும் தேர்வு அறிவிப்புகளில் குரூப் டி பணியிடங்களுக்கு தேர்வர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு நிலவும். பத்தாம் வகுப்பு , ஐடிஐ கல்வி தகுதி கொண்ட பணியிடங்கள் நிரப்பப்படுவதால் பல லட்சக்கணக்கானோர் விண்ணப்பிப்பார்கள்.
தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த தேர்வு தொடர்பான ஒரு தகவலை ஆர்.ஆர்.பி வெளியிட்டுள்ளது. மொத்தம் 22 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் உள்ள 22 ஆயிரம் பணியிடங்களில் தண்டவாள பராமரிப்பாளர் கிரேடு IV பணியில் மட்டும் 11 ஆயிரம் காலியிடங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஷார்ட் நோட்டீஸ் எனப்படும் தேர்வுக்கான உத்தேச அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் வாரத்திற்கு அதிகாரப்பூர்வ முழு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு மத்திய அரசின் ஊதிய கமிஷன் 7-வது படி ஆரம்பமே ரூ.18,800 சம்பளமாக கிடைக்கும். 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். ரெயில்வே வேலை கனவுடன் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுக்கு தயாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.