சிவில் சர்வீஸ் பணிகளுக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு- தமிழக அரசு அறிவிப்பு
இம்மாதிரி ஆளுமைத்தேர்வில் பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.;
சென்னை,
தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், கிராமப்புற ஏழை-எளியோர் பயனடையும் வகையில், மத்திய அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த பயிற்சி மையத்தில் இந்த ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற 376 ஆர்வலர்களில், 34 மகளிர், 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட 87 ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற தேர்வர்களுக்கு வரும் 19 மற்றும் 20-ந்தேதிகளில் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இம்மாதிரி ஆளுமைத்தேர்வில் பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், இன்று மாலை 5 மணிக்குள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். டி.ஏ.எப்.1 மற்றும் டி.ஏ.எப்.2 விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்து அவற்றை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.