திருமணம் செய்துவைக்க மறுத்ததால் ஆத்திரம்:தாய்மாமன் மகளை குத்திக்கொன்ற வாலிபர்

திருமணம் செய்துவைக்க மறுத்ததால் தாய்மாமன் மகளை குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்;

Update:2025-12-10 06:33 IST

நகரி,

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் டெக்கலி பகுதியைச் சேர்ந்தவர் காந்தாராவ். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு பவித்ரா (வயது 19) உள்பட 2 மகள்கள் இருந்தனர். காந்தாராவ் ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். காந்தாராவ்வின் அக்காள் மகன் உமாசங்கர் (25). இவர் வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். உமாசங்கருக்கும், பவித்ராவுக்கும் திருமணம் செய்துவைக்க இருகுடும்பத்தாரும் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் உமாசங்கர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. எனவே காந்தாராவ் திருமணத்திற்கு மறுத்து வந்தார். மேலும் தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாக தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த உமாசங்கர், நேற்று முன்தினம் தனது தாய்மாமனான காந்தாராவ் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பவித்ராவின் கழுத்தில் பலமாக குத்தினார். உடனே உமாசங்கர் தப்பியோடி விட்டார்.

ரத்தவெள்ளத்தில் துடித்த பவித்ராவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்