டீப்பேக் தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்தும் மசோதா-மக்களவையில் தாக்கல்

தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் மசோதா ஒன்றை சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே மக்களவையில் தனிநபர் மசோதாவாக தாக்கல் செய்தார்.;

Update:2025-12-07 11:14 IST

புதுடெல்லி,

டீப்பேக் தொழில்நுட்பம் மூலம் போலியாகவும், ஆபாசமாகவும் உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், பிரபலங்கள் உள்பட மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே இந்த தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் மசோதா ஒன்றை சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே மக்களவையில் தனிநபர் மசோதாவாக தாக்கல் செய்தார்.

மசோதாவை தாக்கல் செய்து அவர் பேசும்போது, ‘துன்புறுத்துதல், ஏமாற்றுதல் மற்றும் தவறான தகவல்களுக்கு டீப்பேக் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இது ஒழுங்குமுறை பாதுகாப்புகளுக்கான அவசரத் தேவையை உருவாக்கியுள்ளது’ என்று கூறினார்.

டீப்பேக் வீடியோக்களை உருவாக்குவதற்கும், பகிர்வதற்கும் தெளிவான சட்டப்பூர்வை கட்டமைப்பை உருவாக்குவதுடன், தேசிய பாதுகாப்பு தாக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், தனியுரிமை, குடிமை பங்கேற்பு மற்றும் சாத்தியமான தேர்தல் குறுக்கீடு ஆகியவற்றில் டீப்பேக்குகளின் செல்வாக்கை மதிப்பிடுவதற்கும் ஒரு சிறப்பு அமைப்பாக டீப்பேக் பணிக்குழுவை நிறுவவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்