டெல்லி: சொகுசு கார் மோதி ஒருவர் பலி; 2 பேர் காயம்

காரை சிவம் (வயது 29) என்பவர் ஓட்டியுள்ளார். அவருடைய மனைவியும், மூத்த சகோதரரும் காரில் பயணித்து உள்ளனர்.;

Update:2025-11-30 10:19 IST

புதுடெல்லி,

டெல்லியில் வசந்த் கஞ்ச் பகுதியில் தனியார் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இதில் உள்ள உணவு விடுதியில் 23, 35 மற்றும் 23 வயதுடைய 3 பேர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்றிரவு வீடு திரும்புவதற்காக, ஆட்டோ நிலையத்தில் நின்றிருந்தனர். அப்போது, விரைவாக வந்த மெர்சிடிஸ் ரக கார் ஒன்று அவர்கள் மீது திடீரென மோதியது.

இந்த சம்பவத்தில் அவர்கள் 3 பேரும் அந்த இடத்திலேயே காயமடைந்து விழுந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் ரோகித் (வயது 23) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

காரை சிவம் (வயது 29) என்பவர் ஓட்டியுள்ளார். அவருடைய மனைவியும், மூத்த சகோதரரும் காரில் பயணித்து உள்ளனர். அந்த கார் அபிஷேக் என்பவருக்கு உரியது.

முதல்கட்ட விசாரணையில், சாலை பிரிப்பான் அருகே வந்தபோது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததில் அவர்கள் மீது மோதியுள்ளது என தெரிய வந்துள்ளது. அதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்