கும்பமேளாவுக்காக ரூ.5,657 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள்; பட்னாவிஸ் தலைமையில் நாளை பூமி பூஜை
முதல்-மந்திரி பட்னாவிஸ் நாசிக் நகரில் புதிய கட்டிடம் ஒன்றையும் திறந்து வைக்கிறார்.;
நாசிக்,
மராட்டியத்தில் 2026-27 ஆண்டின்போது நாசிக் மற்றும் திரிம்பகேஷ்வரில் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக ரூ.5,657 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு முதல்-மந்திரி பட்னாவிஸ் தலைமையில் நாளை பூமி பூஜை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இதுதவிர மந்திரிகள் சகன் புஜ்பால், கிரிஷ் மகாஜன், தாதாஜி பூசே, உதய் சமந்த், ஜெய்குமார் ராவல், ஷிவேந்திர சின்ஹரஜே போசலே மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த பயணத்தின்போது, நாசிக் நகரில் புதிய கட்டிடம் ஒன்றையும் முதல்-மந்திரி பட்னாவிஸ் திறந்து வைக்கிறார். ராம்குண்ட் பகுதியில் ராம்கால் பாதையையும் அவர் ஆய்வு செய்ய உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.