குஜராத்: லாரி மீது கார் மோதி தீப்பிடித்தது - 4 பேர் கருகி பலி

லாரி, கார் விபத்துக்குள்ளானதில் இரண்டும் தீப்பிடித்து எரிந்தன.;

Update:2025-08-09 00:30 IST

காந்திநகர்,

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் ஹரிபார் கிராமத்துக்கு அருகே தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நேற்று முன்தினம் இரவு கண்டெய்னர் லாரி கவிழ்ந்து. அப்போது கண்டெய்னரை பின்தொடர்ந்து வந்த லாரி பாதையை மாற்ற முயன்றது. இதில் திடீரென பின்னால் வந்த ஒரு காரின் மீது லாரி பயங்கரமாக மோதியது.

இதனால் லாரி, கார் இரண்டும் தீப்பிடித்து எரிந்தன. இதில் கார், லாரியில் சிக்கி கொண்டவர்கள் மீதும் தீ பரவியது. காரில் இருந்த 2 மாணவர்கள், லாரியில் இருந்த 2 பேர் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரில் இருந்த 7 மாணவர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இரு வாகனங்களிலும் ஏற்பட்ட தீயை அணைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜூனாகத்தில் உள்ள ஒரு உறைவிட பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கட்ச் மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்