மினிமம் பேலன்ஸ் ரூ.50 ஆயிரமாக உயர்த்திய ஐசிஐசிஐ: ரிசர்வ் வங்கி கவர்னர் கொடுத்த பதில்

ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்பை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தியது.;

Update:2025-08-12 09:05 IST

தனியார் வங்கிகள் உள்பட பல வங்கிகள் தங்களுடைய குறைந்தபட்ச வங்கி இருப்பை உயர்த்தி வருகிறார்கள். ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்பை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தியது. இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, “ஒவ்வொரு வங்கியும் தங்களின் வாடிக்கையாளர் வகைகள், மற்றும் சேவை நிலைமைகளைப் பொறுத்து குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயிக்கலாம். அதேபோல், குறைவாக விதிக்கப்படும் கட்டணம், விலக்கு பெறும் வாடிக்கையாளர் பிரிவுகள் போன்றவற்றையும் வங்கிகள் தாங்களே முடிவு செய்ய சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது” என விளக்கம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்