சிலை கடத்தல் வழக்கு - பொன்.மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
சிலை கடத்தல் வழக்கில் இருந்து பொன். மாணிக்கவேலுக்கு முன் ஜாமின் வழங்க கூடுதல் நிபந்தனைகளை விதிக்க கோரி சிபிஐ தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.;
புதுடெல்லி,
சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக பொன் மாணிக்கவேலும், சிபிஐ விசாரணை அதிகாரியும் பரஸ்பரம் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. சிலை கடத்தல் வழக்கில் இருந்து பொன். மாணிக்கவேலுக்கு முன் ஜாமின் வழங்க கூடுதல் நிபந்தனைகளை விதிக்க கோரி சிபிஐ தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அப்போது, பொன் மாணிக்கவேலின் பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதால், அதனை புதுப்பித்து சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதுவரை வெளிநாடுகளுக்கு செல்லமாட்டார் என்றும் அவர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கு தொடர்பாக பொன் மாணிக்கவேலும், சிபிஐ விசாரணை அதிகாரியும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.