சென்னை புறப்பட்ட விமானம் பெங்களூருவில் தரையிறக்கம்
கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது.;
பெங்களூரு,
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று முன் தினம் மாலை 4.40 மணிக்கு சென்னைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 168 பேர் பயணித்தனர்.
விமானம் இரவு 7.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. ஆனால், தரையிறங்கும் முதல் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனால் இரண்டாவது முறையாக விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால், இரண்டாவது முயற்சி மேற்கொள்ளாமல் விமானிகள் விமானத்தை பெங்களூருவுக்கு இயக்கினர். இரவு 8.20 மணியளவில் பெங்களூரு விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.