திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு

ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்கியது.;

Update:2025-11-01 20:49 IST

திருப்பதி,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 4,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.-03 என்ற மல்டி-பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த உள்ளது. நாளை மாலை 5:26 மணிக்கு எல்.வி.எம்.3-எம்5 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்கியது.

இந்த நிலையில், ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. ஒவ்வொரு முக்கிய ராக்கெட்டும் விண்ணில் செலுத்தப்படும்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் வழிபாடு செய்வது பாரம்பரிய முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்