கமல்ஹாசன் டெல்லி பயணம்; இன்று எம்.பி.யாக பதவி ஏற்பு

மக்களின் வாழ்த்துகளுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன் என்று கமல்ஹாசன் கூறினார்.;

Update:2025-07-25 04:15 IST

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், தி.மு.க. கூட்டணி சார்பில் மேல்சபை எம்.பி.யாக இன்று(வெள்ளிக்கிழமை) டெல்லியில் பதவியேற்க உள்ளார்.இதற்காக டெல்லி புறப்பட்டு சென்ற கமல்ஹாசன், முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களின் வாழ்த்துகளுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன். இது எனக்கு இந்தியனாக கொடுக்கப்பட்டு இருக்கும் மரியாதை மற்றும் கடமையை நான் செய்ய உள்ளேன். இதை நான், பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்