கேரளாவில் அனைவருக்கும் உணவு, வீடு, கல்வி வழங்கப்படும்-ஆளும் கூட்டணி தேர்தல் அறிக்கையில் உறுதி
தேர்தல் அறிக்கையை ஆளும் இடதுசாரி முன்னணி தலைவர்கள் இணைந்து வெளியிட்டனர்.;
திருவனந்தபுரம்,
கேரளாவில் அடுத்த மாதம் (டிசம்பர்) 2 கட்டங்களாக உள்ளாட்சித்தேர்தல் நடக்கிறது. இதற்காக மாநில கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளன.உள்ளாட்சி தேர்தலுக்காக ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் அனைவருக்கும் உணவு, வீடு, கல்வி மற்றும் சுகாதாரம் உறுதி செய்யப்படும் என கூறப்பட்டு உள்ளது.
மேலும் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மாநிலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக செயல்திட்டம் வகுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டு இருந்தது.மாநிலத்தில் ஏற்கனவே 64 ஆயிரம் குடும்பங்கள் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் மாநிலத்தில் இருந்து வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் ஆளும் கூட்டணி வாக்குறுதி அளித்து இருக்கிறது. இந்த தேர்தல் அறிக்கையை ஆளும் இடதுசாரி முன்னணி தலைவர்கள் இணைந்து வெளியிட்டனர்.