மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன்: ஆசிரியர் பயிற்சி மாணவி தற்கொலை

இளம்பெண்ணை அவரது காதலன் அறையில் அடைத்து வைத்து, துன்புறுத்தி மதம் மாற கட்டாயப்படுத்தியுள்ளார்.;

Update:2025-08-11 16:16 IST

கோப்புப்படம் 

கொச்சி,

கேரள மாநிலத்தில் காதலன் மதம் மாற கட்டாயப்படுத்தி துன்புறுத்தியதால் ஆசிரியர் பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் சோனா எல்டோஸ் (23 வயது). ஆசிரியர் பயிற்சி மாணவியான இவர், ரமீஸ் என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்து வந்தார். இந்த நிலையில் ரமீஸ் மற்றும் அவரது உறவினர்கள் சோனாவை இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த சோனா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் சோனா, "தனது காதலன் ரமீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் தன்னை மதம் மாற வற்புறுத்தியதாகவும், தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், ரமீஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சோனாவின் தாய் பிந்து கூறும்போது, "ரமீஸின் குடும்பத்தினர் முதலில் எங்களிடம் வந்து திருமணம் குறித்து பேசினர். சோனா இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர். ரமீஸ் மீதான காதல் காரணமாக முதலில் இதற்கு சோனா ஒப்புக்கொண்டாள். பின்னர் ரமீஸுக்கு ஒரு கடத்தல் வழக்கில் தொடர்புடையது தெரிய வந்ததும் மதம் மாற சோனா மறுத்துவிட்டாள்.

இருப்பினும் சோனா ரமீஸை உண்மையாக நேசித்ததால் அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தாள். ஆனால் ரமீஸ், சோனாவை அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து, அடித்து, துன்புறுத்தி மதம் மாற கட்டாயப்படுத்தினார்" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்