சமூக வலைதளங்களில் கேரள ஐகோர்ட்டு நீதிபதிகளை அவமதித்தவருக்கு சிறை தண்டனை

சமூக வலைதளங்களில் கேரள ஐகோர்ட்டு நீதிபதிகளை அவமதித்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;

Update:2025-07-18 14:33 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 44). இவர், கேரள ஐகோர்ட்டு நீதிபதிகளான தேவன் ராமச்சந்திரன், அனில் கே.நரேந்திரன், அஜித்குமார் ஆகியோருக்கு எதிராக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, சுரேஷ் குமார் மன்னிப்பு கேட்டதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் மன்னிப்பு வழங்கப்பட்டது.

இந்தநிலையில் கேரள ஐகோர்ட்டில் நீதிபதிகள் ராஜ விஜயராகவன், ஜோபின் செபஸ்டின் ஆகியோர் அடங்கிய அமர்வு சுரேஷ் குமார் மீதான வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் நீதிபதிகளை சமூக வலைதளங்களில் அவமதித்த அவருக்கு 3 நாட்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். பின்னர் சுரேஷ் குமார் எர்ணாகுளம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்