பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி....என்ன தெரியுமா ?
மெஸ்சி வருகிற டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்.;
புதுடெல்லி ,
பிரதமர் மோடி வரும் 17ம் தேதி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பிறந்தநாள் பரிசு அனுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக, அவருக்கு 2022 ஆம் ஆண்டு உலககோப்பையை வென்ற அர்ஜென்டினா ஜெர்சியில் தனது கையொப்பமிட்டு பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.
மெஸ்சி வருகிற டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார். மெஸ்ஸி டிசம்பர் 12-ந் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது