தெலுங்கானா: ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து - 9 பேர் காயம்

ஆம்னி பஸ்சில் 20 பேர் பயணித்தனர்.;

Update:2025-10-26 12:41 IST

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் குண்டூருக்கு நேற்று மாலை மின்சாரத்தில் இயங்கும் ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 20 பேர் பயணித்தனர்.

ரங்காரெட்டி மாவட்டம் பெட்டா அம்பர்பேட்டை வெளிவட்ட சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 9 பயணிகள் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக ஆந்திராவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பஸ் தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்