அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்திய காதலி... ஆத்திரத்தில் காதலன் செய்த வெறிச்செயல்
இருவரும் லூதியானாவில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.;
அரியானா,
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தை சேர்ந்தவர் அமித் நிஷாத். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
விவாகரத்து தொடர்பான நடவடிக்கைகள் நடந்து வரும் சூழலில்தான், அந்த பெண்ணுக்கு அமித் நிஷாத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அமித் நிஷாத்தை அந்த பெண் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அமித் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இருவரும் லூதியானாவில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண் அமித் நிஷாத்தின் அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் வலியில் துடித்த அமித், ஆத்திரத்தில் அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர் ஓட்டல் ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த அமித்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவருக்கு அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதால், சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.