கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல் காந்தி கருத்து

வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பான ஆட்சியை கேரளா விரும்புகிறது என்பதே இந்த தேர்தலின் செய்தி என்று ராகுல் காந்தி கூறினார்.;

Update:2025-12-13 20:00 IST

புதுடெல்லி: 

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போது வரை வெளியான முடிவுகளின்படி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது. ஆளும் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 2-ம் இடத்திலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூறியதாவது; ‘‘உள்ளாட்சித் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீது நம்பிக்கை வைத்த கேரள மக்களுக்கு ஒரு சல்யூட். இது ஒரு தீர்க்கமான மற்றும் உற்சாகம் அளிக்கும் மக்கள் ஆணை.

ஐக்கிய ஜனநாயக முன்னணி மீதான நம்பிக்கை அதிகரித்து வருவதற்கான தெளிவான அறிகுறியாக இந்த முடிவுகள் உள்ளன. மேலும், வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நமது மாபெரும் வெற்றிக்கு இது வழிவகுக்கும். மக்களின் பிரச்சினைகளை கேட்கும், பதில் அளிக்கும், வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பான ஆட்சியை கேரளா விரும்புகிறது என்பதே இந்த தேர்தலின் செய்தி” என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்