அயோத்தி ராமர் கோவிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு
இரண்டு நாள் பயணமாக நிர்மலா சீதாராமன் நேற்று அயோத்தி சென்றார்.;
புதுடெல்லி,
அயோத்தி ராமர் கோவிலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது குடும்பத்தினருடன் வழிபாடு மேற்கொண்டார். இரண்டு நாள் பயணமாக நேற்று அயோத்தி வந்த நிர்மலா சீதாராமன், ராமரின் ஆரத்தி பூஜையிலும், ராம தர்பார் மற்றும் துர்கா தேவியின் சன்னதியிலும் வழிபாடு நடத்தினார். கோவில் வளாகத்தில் உள்ள குபேர் திலாவில் சிவபெருமானுக்கு 'அபிஷேகம்' செய்ததாகவும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நேற்று அயோத்தியில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், கர்நாடக இசை முன்னோடிகளில் ஒருவரான அருணாசல கவிராயர், கர்நாடக இசையின் பிதாமகர் எனப் போற்றப்படும் புரந்தரதாசர் ஆகியோரின் சிலைகள் பிரஹஸ்பதி குண்ட் பகுதியில் அமைக்கப்பட்ட சிலைகள் திறக்கப்பட்டன. இந்த நிகழ்வில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் நிர்மலா சீதாராமன் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.