மத்திய ரெயில்வே மந்திரியுடன் திருமாவளவன் சந்திப்பு

ஜன் சதாப்தி விரைவு ரெயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.;

Update:2025-12-17 20:24 IST

புதுடெல்லி,

மத்திய ரெயில்வே மந்திரியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் இன்று சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“இன்று ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து சிதம்பரம் தொகுதிக்கான கீழ்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.

1.சிதம்பரம்: கோயம்புத்தூரில் இருந்து மயிலாடுதுறை வரை இயங்கும் ஜன் சதாப்தி விரைவு ரெயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும்.
2.பரங்கிப்பேட்டை: ரெயில் எண் 20605/20606 மற்றும் விரைவு ரெயில் எண் 16103/16104 ஆகியவை பரங்கிப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்