45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங். கட்சியினர் வீடு வீடாக ஆய்வு
மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கோவா மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள், யூனி யன் பிரதேசங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டி யல் நேற்று வெளியானது.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கோவா மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. இந்த 5 மாநிலங்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தில் 58 லட்சத்திற்கு மேற்பட்டவர்களும், ராஜஸ்தானில் 44 லட்சம் பேரும், கோவாவில் 1.01 லட்சம் பேரும், புதுச்சேரியில் 1 லட்சத்திற்கு மேற்பட்டோரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. மேற்கு வங்காளத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை முன்பு 7.66 கோடியாக இருந்தது. தற்போது 7.08 கோடியாக குறைந்துள்ளது. அங்கு 58 லட்சத்திற்கும் மேல் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. இது சில முக்கிய தொகுதிகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் தொகுதியான பவானிபூரில் 47,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் அந்த தொகுதியில் 2,06,295 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வரைவு பட்டியலில் 1,61,509 வாக்காளர் பெயர்கள் மட்டுமே உள்ளன. 21.7 சதவீத வாக்காளர்கள் அங்கு நீக்கப்பட்டுள்ளனர்.அந்த தொகுதியில் கொல்கத்தா மாநகராட்சியின் 8 வார்டுகள் இடம் பெற்றுள்ளன. இதில் 3 வார்டுகளில் அதிக எண்ணிக்கையிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.மம்தா பானர்ஜி தொகுதியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதால், நீக்கப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்கள் அந்த இடங்களுக்கு சென்று பெயர்களை சேர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அந்த கட்சி உத்தரவிட்டுள்ளது.
எந்த சூழ்நிலையிலும் எந்தவொரு தகுதியான பெயரும் நீக்கப்படக் கூடாது என்று கட்சி மேலிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உரிமை கோரல் மற்றும் ஆட்சேபனை விரைவில் தொடங்கும் என்பதால், சரிபார்ப்பின் போது வாக்காளர்களுக்கு துணையாக நிற்குமாறு உள்ளூர் கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை அறிவுறுத்தியுள்ளது. ஆவணங்கள் நிரப்புதல், படிவங்கள் பூர்த்தி செய்தல் ஆகியவற்றில் மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. பவானிபூர் தொகுதி மட்டுமின்றி, கொல்கத்தா மேற்கு, பாலிகஞ்ச், ராஜ்பிகாரி ஆகிய தொகுதிகளிலும் ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த 4 தொகுதிகளில் மொத்தம் 2.16 லட்சத்திற்கும் அதிகமானோர்