ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
ரெப்போ ரேட் விகிதம் 5.5சதவீதம் ஆகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.;
புதுடெல்லி,
இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை குழு (MPC) ஆகஸ்ட் 4 அன்று தொடங்கிய கூட்டத்தின் முக்கிய முடிவுகளை இன்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்டார். பலரின் கணிப்புகளை போலவே இக்கூட்டத்தில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது.
காலாண்டு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை. வங்கிகள் தரும் வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ரெப்போ ரேட் விகிதம் 5.5சதவீதம் ஆகவே தொடரும். இந்த ஆண்டு பிப்ரவரி முதல் சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.பிப்ரவரி முதல் 3 முறையாக ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. என்றார்.