ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தர பிரதேசத்திற்கு வருகை; முதல்-மந்திரி, கவர்னர் சிறப்பான வரவேற்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.;
கோரக்பூர்,
ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தர பிரதேசத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று கோரக்பூர் நகருக்கு சென்றுள்ளார். அவரை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் கவர்னர் ஆனந்திபென் பட்டேல் ஆகியோர் சிறப்பான முறையில் வரவேற்றனர்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக முர்மு, கோரக்நாத் கோவிலுக்கு சென்றார். அவருடன் முதல்-மந்திரி மற்றும் கவர்னர் உடன் சென்றனர். ஜனாதிபதி, மகாயோகி கோரக்நாத் கோவிலில் வழிபாடும் செய்கிறார்.
இதனை தொடர்ந்து, பதத் பகுதிக்குட்பட்ட பிப்ரி என்ற இடத்தில் கட்டப்பட்டு உள்ள உத்தர பிரதேசத்தின் முதல் ஆயுஷ் பல்கலைக்கழகம் ஒன்றை நாளை அவர் திறந்து வைக்கிறார். இதேபோன்று, கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் ஒரு மணிநேரம் இருந்து பார்வையிட்டு விட்டு செல்வார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வாகன சோதனையும் நடைபெற்றது.