ரிமால் புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தம்

ரிமால் புயல் எதிரொலியாக கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-05-26 10:00 GMT

கொல்கத்தா,

வங்கக்கடலில் வடக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ள ரிமால் புயல் தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளது. 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல் அதி தீவிரப்புயலாக மேலும் தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் வங்காள தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடற்கரையில் சாகர் தீவு, கேபபுரா இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ரிமால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. நண்பகல் முதல் 21 மணி நேரத்துக்கு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கு செல்லும் 394 விமானங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்