மேற்கு வங்கத்தில் சாலை விபத்து - 10 பக்தர்கள் பலி
பீகாரை சேர்ந்த பக்தர்கள் மேற்கு வங்காளத்தில் பல்வேறு கோவில்களுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் பர்த்வான் நகரில் இன்று, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் 10 பக்தர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 35 பேர் காயமடைந்தனர். பீகாரை சேர்ந்த இந்த பக்தர்கள் மேற்கு வங்காளத்தில் பல்வேறு கோவில்களுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள பகுய்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தின்போது சொகுசு பேருந்தில் 45 பேர் இருந்தனர். இறந்தவர்களில் 8 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் அடங்குவர் என்று அவர் கூறினார். ஆறு குழந்தைகள் உட்பட காயமடைந்தவர்கள் பர்த்வான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.