ரஷிய அதிபர் புதின் 4-ந்தேதி இந்தியா வருகை
டெல்லியில் நடைபெறும் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் புதின் கலந்து கொள்ள உள்ளார்.;
மாஸ்கோ,
ரஷ்ய அதிபர் புதின் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக வரும் டிசம்பர் 4-ந்தேதி இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தனது வருகையின்போது டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியுடன், ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ரஷிய அதிபர் புதினின் வரவிருக்கும் அரசு முறை சுற்றுப்பயணம், இந்தியா மற்றும் ரஷியாவின் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், 'சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை' குறித்த தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தவும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.