எல்லையில் ஊடுருவல் முயற்சி; துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர் பலி

மோசமான வானிலையை பயன்படுத்தி ஊடுருவல் முயற்சி நடைபெற்ற நிலையில், அதை நமது பாதுகாப்பு படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது;

Update:2025-08-13 12:29 IST

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் நேற்று இரவு ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில், இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது. வழக்கமான ஊடுருவல் முயற்சி இது இல்லை எனவும், பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்த முயற்சி நடைபெற்று இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எல்லையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் போது, இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையை பயன்படுத்தி ஊடுருவல் முயற்சி நடைபெற்ற நிலையில், அதை நமது பாதுகாப்பு படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு நடைபெற்ற மிகப்பெரிய ஊடுருவல் முயற்சி இதுவேயாகும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தான் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு முன்வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்