ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் 2 பேர் பரிதாப சாவு

விபத்து நடந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆம்புலன்ஸ் வரவில்லை எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2025-06-14 18:16 IST

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இரண்டு பைக்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னரே ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. இதனால் படுகாயமடைந்த இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே படுகாயம் அடைந்த 4 பேர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள், விபத்து நடந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆம்புலன்ஸ் வரவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி ஆம்புலன்ஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்