உத்தர பிரதேசம்: ரஷிய அதிபர் புதினின் படத்திற்கு ஆரத்தி எடுத்து வாழ்த்திய பெண்கள்
டெல்லியில் நடைபெறும் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க உள்ளார்.;
லக்னோ,
ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தார். தலைநகர் டெல்லிக்கு வரும் புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று புதின் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். டெல்லியில் தரையிறங்கியதும் ரஷிய அதிபர் புதினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினை வரவேற்கும் விதமாக உத்தர பிரதேச மாநில வாரணாசியில், புதினின் புகைப்படத்தை வைத்து பெண்கள் ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து இந்திய தேசிய கொடியை ஏந்தியபடி பாடல்கள் பாடி பேரணியாக சென்றனர். பிரதமர் மோடியுடன் புதின் கைகுலுக்கும் புகைப்படங்களை ஏந்தி, புதினின் இந்திய வருகைக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.