போதை பொருள் விற்ற கடைக்காரர் கைது

அம்பகரத்தூர் அருகே போதைப்பொருள் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-05 21:58 IST

அம்பகரத்தூர்

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பிக்பஜார் தெரு, கல்வி நிறுவனம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, அம்பகரத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றை சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கபட்டு, கடை உரிமையாளர் அம்பகரத்தூர் பிடாரன்சந்தை சேர்ந்த வெங்கடாஜலபதியை (வயது48) கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்