கோவில் திருக்கல்யாணத்தில் விளை பொருட்கள் சீர்வரிசை

திருக்கனூர் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருக்கல்யாணத்தில் நெற்கதிர், நுங்கு, மாங்காய், தேங்காய் போன்ற விளைப்பொருட்களை சீர்வரிசையாய் வைத்ததை பொதுமக்கள் வரவேற்றனர்.

Update: 2022-05-19 13:36 GMT

திருக்கனூர்

திருக்கனூர் அருகே உள்ள அப்பம்பட்டு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் அய்யனாரப்பன் கோவில் ஊரணி பொங்கலுடன் தொடங்கியது.

இதையொட்டி முத்து மாரியம்மன் கரகம் வீதி உலா மற்றும் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிவன்-பார்வதிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

இந்தநிகழ்ச்சியின்போது வழக்கமான பல்வேறு வகையான பழத்தட்டுகள் வைக்கப்படுவதற்கு பதில் வித்தியாசமாக விவசாயம் மூலம் நேரடியாக கிடைக்கக்கூடிய நெற்கதிர், நுங்கு, வாழைக்காய், நார்த்தங்காய், பப்பாளிக்காய், தேங்காய், மாங்காய், எலுமிச்சை, ஈச்சங்காய் உள்ளிட்டவை சீர்வரிசை பொருட்களாக தட்டுகளில் வைத்து எடுத்து வந்தனர். இதை வைத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் காய்கறிகளை சீதனமாக கொடுத்து அம்மன்- சாமிக்கு நடந்த திருக்கல்யாணம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

வம்புப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்