மோட்டார் சைக்கிள் திருட்டு
காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.;
காரைக்கால்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பாலாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல்ராஜ் (வயது 23). இவர் காரைக்கால் ஞானபிரகாசம் வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக காரைக்கால் சேத்திலால் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். சம்பவத்தன்று இரவு இவர், தனது வீட்டின் வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீசில் ராகுல்ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.