புதுச்சேரி- பெங்களூரு விமான சேவை ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக புதுச்சேரி- பெங்களூரு இடையே மட்டும் வருகிற 17-ந்தேதி வரை இந்த விமான சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-08 17:21 GMT

புதுச்சேரி

புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூருவுக்கு விமான சேவை நடந்து வருகிறது. அதாவது நாள்தோறும் பகல் 11.55 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு நண்பகல் 1.35 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் புதுவையில் இருந்து அதே விமானம் 1.55 மணிக்கு புறப்பட்டு 2.50 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது. அங்கிருந்து மாலை 3.20 மணிக்கு புறப்படும் விமானம் 4.15 மணிக்கு புதுச்சேரிக்கு வருகிறது. மாலை 4.35 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு 6.20 மணிக்கு ஐதராபாத்தை சென்றடைகிறது.

பராமரிப்பு பணிகள் காரணமாக புதுச்சேரி- பெங்களூரு இடையே மட்டும் வருகிற 17-ந்தேதி வரை இந்த விமான சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்