ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
புதுவை அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழந்தார்.;
புதுச்சேரி
புதுவை ரெட்டியார்பாளையம் வயல்வெளி நகர் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே 55 வயது மதிக்கத்தக்க நபர் பிணமாக கிடந்தார். அவரது பாக்கெட்டில் புதுவையிலிருந்து காட்பாடி செல்வதற்கான டிக்கெட் இருந்தது. எனவே, அவர் காட்பாடிக்கு செல்ல டிக்கெட் எடுத்து ரெயிலில் படிக்கட்டில் பயணித்தபோது தவறிவிழுந்து தண்டவாளம் அருகே நடப்பட்டிருக்கும் மின்கம்பத்தில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.