குற்றவாளிகளை கைது செய்ய தமிழக போலீசாருக்கு துணிச்சல் இல்லை - எச்.ராஜா

குற்றவாளிகளை கைது செய்ய தமிழக போலீசாருக்கு துணிச்சல் இல்லை எச்.ராஜா என்றார்.

Update: 2022-09-25 17:45 GMT

வில்லியனூர்

புதுவை பா.ஜ.க. சார்பில் 'மோடி அட் 20' புத்தக வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கு வில்லியனூரில் நடந்தது. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். செல்வ கணபதி எம்.பி., பொதுச்செயலாளர் மோகன்குமார், மாநில துணை தலைவர் ரவிச்சந்திரன், வில்லியனூர் மாவட்ட தலைவர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக எச்.ராஜா கலந்து கொண்டு மோடியின் புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பற்றி தேச விரோத நடவடிக்கைகளை உறுதி செய்யப்பட்ட பிறகு தான் பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது. இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பா.ஜ.க. அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய தமிழக போலீசாருக்கு துணிச்சல் இல்லை. பா.ஜ.க.விடம் காட்டிய துணிச்சலை ஏன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. அமைப்பிடம் காட்ட முடியவில்லை. திருமாவளவன், சீமான் போன்றோர் இந்த சம்பவத்தை திசைத்திருப்ப பார்க்கின்றனர்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்