புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு கலந்தாய்வில் கலந்து கொண்ட ஆசிரியர்கள்

பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.

Update: 2023-09-08 17:32 GMT

காரைக்கால்

பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.

பணியிட மாறுதல் கலந்தாய்வு

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வின் போது காரைக்கால் பகுதியை ஏ, பி என பிரிக்காமல் ஒரே பகுதியாக நடத்த வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று புதுவை யூனியன் பிரதேச ஆசிரியர் காரைக்கால் சங்கம் வலியுறுத்தி வந்தது.

இதனை கண்டுகொள்ளாத புதுச்சேரி அரசை கண்டித்து கடந்த 5-ந்தேதி ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிகளில் பாடம் எடுத்தனர்.

கலந்தாய்வில் கலந்து கொண்டனர்

இந்தநிலையில் இன்று காரைக்கால் முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இதற்கிடையே தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட ஆசிரியர்கள் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்