புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புதுவையில் தனியார் பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-07-01 21:52 IST

புதுச்சேரி

உருளையன்பேட்டை மங்கலட்சுமி நகரில் உள்ள தனியார் பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் (வயது 36) என்பவர் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.1,000 மதிப்பிலான புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்