வீட்டின் அருகே விளையாட சென்ற 3 வயது ஆண் குழந்தை.. சில நிமிடங்களில் நடந்த பெரும் துயரம்

வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் சஞ்சீவ் மித்ரன் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது;

Update:2026-01-22 12:33 IST

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன்- பவானி தம்பதியரின் மகன் சஞ்சீவ் மித்ரன் (வயது 3). நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டி முன்பு அவன் விளையாடிக் கொண்டிருந்தான். நீண்டநேரம் விளையாடிய குழந்தை சஞ்சீவ் மித்ரனை திடீரென காணவில்லை. இதனால் பதறிய பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் அவனை அந்த பகுதியில் தேடினர்.

அப்போது வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் சஞ்சீவ் மித்ரன் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் குழந்தை சஞ்சீவ் மித்ரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டதும் அவனது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இந்த சோக சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்