சட்டசபை நிகழ்வுகளை முதல் முறையாக பார்வையிட வந்த பழங்குடியின பெண்கள்

எம்.எல்.ஏ.க்களிடம் பரிந்துரை கடிதம் வாங்கி வந்து கொடுத்தால், சட்டசபை நிகழ்வுகளை பார்வையிட அனுமதி அளிக்கப்படும்.;

Update:2026-01-22 13:48 IST

தமிழக சட்டசபை நிகழ்வுகளை பார்வையிட பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எம்.எல்.ஏ.க்களிடம் பரிந்துரை கடிதம் வாங்கி வந்து கொடுத்தால், சட்டசபை நிகழ்வுகளை பார்வையிட அனுமதி அளிக்கப்படும்.

இதற்காக, சட்டசபை மாடத்தில் இருபுறமும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 30 நிமிடம் என்ற வகையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வரும்போது, என்ன விவாதம் நடந்து கொண்டிருக்கிறதோ, அதை பார்வையிடலாம். இதுவரை, பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் சட்டசபை நிகழ்வுகளை பார்வையிட வந்துள்ளனர்.

இன்று முதல் முறையாக, கூடலூரில் இருந்து பழங்குடியின பெண்கள் சட்டசபை நிகழ்வுகளை பார்வையிட பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். அவர்களுக்கான பரிந்துரை கடிதத்தை கூடலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் வழங்கியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்