தூத்துக்குடியில் குழாய் உடைந்து பிரதான சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்
எட்டயபுரம் சாலை, ரஹ்மத்துல்லாபுரம் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் குழாய் உடைந்து குடிநீர் மளமளவென வெளியேறி சாலையில் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.;
தூத்துக்குடி மாநகரின் மத்திய பகுதியில் எட்டயபுரம் சாலை, ரஹ்மத்துல்லாபுரம் பகுதியில் நேற்று அதிகாலையில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் குழாய் உடைந்து குடிநீர் மளமளவென வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. இதனால் மழை வெள்ளம் போல் சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கேட்டபோது, மாநகராட்சி தரப்பில் யாரும் சாலையை தோண்டி பைப் லைன் வேலை செய்யவில்லை. யாரும் மர்ம நபர்கள் திருட்டு லைன் கொடுப்பதற்காக தோண்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.