வைத்திலிங்கம் ராஜினாமா: எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்வு

தமிழக சட்டசபைக்கு அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.;

Update:2026-01-21 10:10 IST

கோப்புப்படம்

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே, ஆலங்குளம் தொகுதி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். அதேபோல், கோபி செட்டிப்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

மேலும், வால்பாறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21-ந் தேதி மரணம் அடைந்ததால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. சேந்தமங்கலம் தொகுதி பொன்னுச்சாமியும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி காலமானார். இதனால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக சட்டசபைக்கு அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், எந்தத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. எம்.எல்.ஏ. காலியிடமும் 5 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்