தென்காசியில் ஆதியோகி ரத யாத்திரை.. திரளான பக்தர்கள் தரிசனம்

தென்காசி மற்றும் செங்கோட்டையில் நடைபெற்ற ஆதியோகி ரத யாத்திரையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.;

Update:2026-01-21 11:13 IST

தென்கயிலாய பக்தி பேரவை சார்பில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளயங்கிரி மலை அடிவாரத்திலிருந்து ஆதியோகி ரத யாத்திரை ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு ரத யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆதியோகி ரதம் கொண்டு செல்லப்பட்டு பக்தர்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படுகிறது.

அவ்வகையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று ரத யாத்திரை நடைபெற்றது. நேற்று காலை 6 மணி முதல் 8.30 மணி வரை தென்காசி மருதம் ஹோட்டல் அருகில் உள்ள தென்காசி ஈஷா யோக மையத்திலும், 9.30 மணி முதல் 10மணி வரை இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி வளாகத்திலும், 10.30 மணி முதல் 11 மணி வரை வாஞ்சிநகர் சிலுவை முக்கு பஞ்சலிங்கேஸ்வர் கோவில் அருகிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காக ரதம் நிறுத்தப்பட்டது. காலை 11.30 மணிக்கு செங்கோட்டை கலெக்டர் இல்லத்திற்கு வந்தடைந்தது.

ஆதியோகி ரதத்தற்கு ஈஷா யோகா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாமுரளி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் பக்தர்கள் ஆதியோகியை தரிசனம் செய்து பிரசாதம் வாங்கி சென்றனர். அதனைதொடா்ந்து தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிரபாமுரளி, பிஎல்எம் ஸ்போரட்ஸ் அகாடமி நிறுவனர் எல்.எம்.முரளி செய்திருந்தார்.

இதனைதொடா்ந்து, 2.30 மணிக்கு பிஎல்எம் ஸ்போர்ட்ஸ் அகாடமி வளாகத்திலும் 3 மணிக்கு சீவநல்லுார் பஸ் ஸ்டாப் அருகிலும், 3.30 மணிக்கு தென்காசி புதிய பஸ் நிலையம் ஏகேஎஸ்ஆர் வளாகம், 4 மணி முதல் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் முன்பு பக்தர்களின் தரிசனத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதியோகியை வழிபட்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து ரதமானது பாவூர்சத்திரத்தை நோக்கி புறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்