நெருங்கும் டிட்வா புயல்: அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இன்று இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி புயல் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.